வீதியை கடக்க முயன்ற மாணவி மீது மோதிய லொறி

புத்தளம் – ஆனமடுவ மஹஉஸ்வெவ ரத்னபால தேசிய பாடசாலைக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் 13 வயது மாணவி உயிரிழந்துள்ளார்.

மஹஉஸ்வெவ – வெலேவெவ வடக்கு பகுதியை சேர்ந்த ரத்பால தேசிய பாடசாலையில் எட்டாம் தரத்தில் கல்வி கற்றுவந்த ஈக்சனா (வயது – 8) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தேசிய நடனப் போட்டிக்கு தெரிவான குறித்த மாணவி நேற்று பாடசாலைக்கு வருகை தந்து நடன பயிற்சிகளை முடித்து கொண்டு வீட்டுக்குச் செல்லும் நோக்கில் பேருந்தில் ஏறுவதற்காக வீதியை கடக்க முயன்றபோது, அரிசி மூடைகளை ஏற்றிக் கொண்டு வந்த லொறி மாணவி மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த மாணவியை அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.