வீதியில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

 

-பதுளை நிருபர்-

ஹாலிஎல பதுளை வீதியின் போகஹமடித்த பகுதியில் இன்று புதன்கிழமை பிற்பகல் வீதியில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலிஎல பதலராவ, இலக்கம் 147 இல் வசிக்கும் 63 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தின் கிளைகள் நேற்று   வெட்டப்பட்டு, மரக்கிளைகளை சிறு துண்டுகளாக்கி விறகு எடுப்பதற்காக இன்று வெட்டிக் கொண்டிருந்த போது குறித்த நபர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரனைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்