வீதியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

-பதுளை நிருபர்-

கிராதுருகொட்ட வீதியில் பேரியல் சந்தி பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக கிராதுருகொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

விரணகம பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருகையில்,

நள்ளிரவு 1 மணியளவில் பேரியல் சந்தி வீதியில் மிடோரி கடைக்கு அருகில் காயமடைந்த ஒருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸ் அவசர எண் 119க்கு அழைப்பு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் குறித்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கிராதுருகொட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

யானை தாக்குதலில் உயிரிழந்தாரா அல்லது விபத்தா என பல கோணங்களிலும் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.