
வீதியில் பயணித்த பாதசாரிக்கு நேர்ந்த கதி
கம்பஹா மாபிம பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாபிம பகுதியில் வீதியில் பயணித்த பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் இதன்போது பலத்த காயமடைந்த பாதசாரி கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
