வீதியில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய மோட்டார் சைக்கிள் : இருவர் உயிரிழப்பு

வீதியின் அருகே நின்று கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தம்புள்ளை – கண்டி பிரதான வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 9 மாத குழந்தை தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.