வீதியில் நின்று கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு
காலி, ததெல்ல – பியதிகம சுதர்சனராம வீதியில் நின்று கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் வந்த மூவரில் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காலி பொலிஸார் தெரிவித்தனர்.
