
வீதியில் நடந்து சென்ற பெண்ணின் கன்னத்தை கிள்ளி “ஐ லவ் யூ செல்லம்” என கூறிய இளைஞன்!
இந்திய தமிழ்நாட்டில், சென்னை – தி.நகர் வீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர், வழக்கம் போல் தான் தங்கும் விடுதியில் இருந்து, அலுவலத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தி.நகரை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், நடந்து சென்ற இளம் பெண்ணின் கன்னத்தை கிள்ளி “ஐ லவ் யூ செல்லம்” என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார், உடனே அருகில் இருந்து பொதுமக்கள் அந்த இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து அடி கொடுத்தனர்.
பின்னர் தேனாம்பேட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த இளைஞனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
