
வீதியில் நடந்துச்சென்றவர் மீது முச்சக்கர வண்டி மோதி ஒருவர் பலி!
பேருவளை பகுதியில் நேற்று முச்சக்கர வண்டியொன்று பாதசாரி ஒருவர் மீது மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தர்கா நகரை சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு படுகாயமடைந்து பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
