வீதியில் சென்று கொண்டிருந்தவர் மீது துப்பாக்கி பிரயோகம்

மித்தெனிய – முலன்யாய பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இரவு வீதியில் சென்று கொண்டிருந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த குறித்த நபர் உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த மே மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களினால் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.