வீதியால் சென்றவருக்கு தேடி வந்த ஆபத்து

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு வீதியால் பயணித்த ஒருவர் டிமோ பட்டா வாகனத்தினால் தாக்கப்பட்டு விபத்துக்குள்ளாகி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த நபர் திருகோணமலை கும்புறுப்பிட்டி 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த எஸ். பொற்செல்வன் (வயது – 47) என தெரிய வருகின்றது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.