
வீதியால் சென்றவருக்கு எமனான பேருந்து
கந்தப்பளை-ஹைபொரஸ்ட் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 10.30 மணியலவில் இடம்பெற்ற தனியார் பேருந்து விபத்தில் ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஹைபொரஸ்ட் இலக்கம் (01) தோட்டத்தைச் சேர்ந்த வீரையா காந்தி (வயது – 50) என்பவரே இதன் போது உயிரிழந்துள்ளார்.
நுவரெலியாவிலிருந்து ஹைபொரஸ்ட் பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து வீதியில் நடந்து சென்றவர் மீது மோதிய நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான வலப்பனை நீதவானின் விசாரணைகள் இடம்பெற்றவுடன் பிரேத பரிசோதணைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன்போது பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வலப்பனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
