வீட்டை சேதப்படுத்திய யானை: இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண் பலி
மின்னேரியா பகுதியில் நேற்று திங்கட்கிழமை வீட்டின் சுவரை யானை சேதப்படுத்தியதில் சுவரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பெண் உயிர் இழந்துள்ளார்.
மின்னேரியா – ஹபரானா வீதி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான மேரி மார்கிரெட் பெரேரா (வயது – 64) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
காட்டு யானைகளின் கூட்டம் அடிக்கடி கிராமத்திற்குள் சுற்றித் திரிவதாகவும், அவற்றில் ஒன்று வீட்டிற்குள் நுழைந்து உள்ளே சேமித்து வைக்கப்பட்டிருந்த நெல்லை உண்ண முயன்ற நிலையில் குறித்த வீட்டின் சுவர் யானையால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண் படுகாயமடைந்து ஹிங்குராக்கொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளார்.
இதேவேளை மின்னேரியா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
