
வீட்டை உடைத்து படுக்கை அறைக்குள் விழுந்த விண்கல்
அமெரிக்காவில், நியூஜெர்சி மாகாணத்தில் குடியிருப்பு பகுதி ஒன்றில் வீட்டின் மேற்பகுதியை உடைத்துக்கொண்டு படுக்கையறையில் விழுந்துள்ளது.
வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவர்களால் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில் “ஈட்டா அக்வாரிஸ் விண்கல் மழை என்பது ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று. தற்போது விழுந்துள்ள இந்த விண்கல் ஹாலியன் எனும் வால் நட்சத்திரத்தில் உள்ள குப்பைகளில் ஒன்று” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
