![ஹெரோயினுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது](https://minnal24.com/wp-content/uploads/2023/07/தண்டவாளத்தில்-தலை-வைத்து-தன்-உயிரை-மாய்க்க-முயற்சித்த-நபர்-கைது.jpg)
வீட்டை உடைத்து உடைமைகளை திருடிய நபர் கைது
பசறை மீரியபெத்தயில் வீடொன்றை உடைத்து நகை மற்றும் பணம், வங்கி ஏடிஎம் (ATM) அட்டை ஆகியவற்றை திருடியதாக சந்தேகப்படும் ஒருவர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீரியபெத்த பகுதியை சேர்ந்த 33வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மீரியபெத்த பகுதியில் கடந்த 17 ஆம் திகதி வீடொன்றில் தனிமையில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் வீட்டுக் கதவை உடைத்து அலுமாரியில் இருந்த 2 லட்சம் ரூபாய் பெறுமதியான சங்கிலி ஒன்றும் 7000 ரூபாய் பணமும் வங்கி ஏடிஎம் அட்டையும் திருடப்பட்டுள்ளதாக பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதற்கட்ட விசாரணையின் போது திருடப்பட்ட ஏடிஎம் அட்டையில் இருந்து மேலும் 50000 பணம் பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்