வீட்டுவசதித் திட்டத்துக்கான நிதியுதவி இரட்டிப்பு

இலங்கையில் ‘கிராம சக்தி’ வீட்டுவசதித் திட்டங்களுக்கான நிதி உறுதிப்பாட்டை இந்தியா இரட்டிப்பாக்கியுள்ளது,

இதன் மூலம் ஒரு வீட்டிற்கு இந்தியாவின் பங்களிப்பை இலங்கை மதிப்பில் 500,000 இலிருந்து 1,000,000 ஆக உயர்த்தியுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதங்களை இந்தியத்தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் வீட்டுவசதி அமைச்சக செயலாளர் எல்.பி. குமுதுலால் ஆகியோர் பரிமாறிக்கொண்டனர்.

வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள 1550 க்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் 3 திட்டங்களின் கீழ் அதிகரித்த உதவியால் பயனடைவார்கள் என இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.