வீட்டுரிமைக்காண காணி வேண்டும் என்ற தலைப்பில் மஸ்கெலியாவில் செயலமர்வு
-மஸ்கெலியா நிருபர்-
20 பேர்ச் வீட்டுரிமைக்காண காணி வேண்டும் என கோரிக்கை முன் வைத்து, இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மஸ்கெலியா நகரில் உள்ள மதூஷா கலாச்சார மண்டப கேட்போர் கூடத்தில், பெருந்தோட்ட பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தெளிவூட்டும் செயல் அமர்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில், சுமார் 50 க்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர்.
காலை 10. 30 மணிக்கு ஆரம்பமான செயல் அமர்வு, பிற்பகல் நிறைவடைந்தது.
நிகழ்வில் வளவாளராக, தங்கவேல் கணேசலிங்கம் கலந்து கொண்டு, காணியுரிமை சம்பந்தமான கருத்து பரிமாற்றம் விரிவாக எடுத்து கூறினார்.





