வீட்டுத் திட்ட பயனாளிகளை நேரில் சென்று பார்வையிட்ட பிரதியமைச்சர்

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய வீடற்ற நபர்களுக்கு வீடு வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நிறைவடைந்ததும் வெள்ளிக்கிழமை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பீ. சரத் அவர்கள் குறித்த தெரிவு செய்யப்பட்ட வீடுகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது பட்டினமும் சூழலும், மூதூர், கிண்ணியா, தம்பலகாமம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவிகளில் குறித்த தெரிவு செய்யப்பட்ட வீடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு திறந்து வைத்ததோடு மட்டுமின்றி பயனாளிகளின் குறை நிறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

மேலும் குறித்த பயனாளிகளின் வீட்டு வளாகத்தில் பயன்தரு மரக்கன்றுகளும் பிரதி அமைச்சரால் நடப்பட்டது.

இதில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களின் இணைப்புச் செயலாளர்கள்,பிரதேச செயலாளர்கள்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.