வீட்டுத்தோட்ட பயிர் செய்கைக்கான விதைகள் வழங்கி வைப்பு
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வொலிவேரியன் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யும் முகமாக, வீட்டுத்தோட்ட பயிர் செய்கைக்கான விதைகளை வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம் பெற்றது.
சாய்ந்தமருது விவசாயத் திணைக்களம் மற்றும் கல்முனை அக்ரம் பார்ம் ஹவுஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தொற்றா நோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ.எம்.எஸ். இர்ஷாத், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, மேலும் வீட்டுத் தோட்டத்தினை எவ்வாறு விருத்தி செய்வது தொடர்பான பூரண விளக்கம் விவசாய திணைக்கள உத்தியோகத்தரினால் அப்பகுதி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்