வீட்டில் 15 கஞ்சா செடிகள் வளர்த்த ஆசிரியர் கைது

பொலன்னறுவையில் பாடசாலை ஆசிரியர் ஒருவரின் வீட்டில் மலசலகூடத்திற்கு அருகில் சட்டவிரோதமான கஞ்சா செடிகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலன்னறுவையில் உள்ள தேசிய பாடசாலையில்  கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் தோட்டத்தில் இந்த கஞ்சா செடிகள் காணப்பட்டன.

அங்கு சுமார் 15 கஞ்சா செடிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியபெதும பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து,  இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,  குறித்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்தனகடவல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆசிரியர் 15 கஞ்சா செடிகளுடன் ஹிகுரகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.