வீட்டில் வைத்து கசிப்பு காய்ச்சிய பெண் கைது!
யாழ்ப்பாணத்தில் வீட்டில் வைத்து கசிப்பு காய்ச்சிய 55 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக, தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகம் ஈவினை கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து, குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, 150 லீற்றர் கோடா, 5 லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயபாலா தலைமையில் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது, குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.