வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை: நகை திருட்டு

இந்தியாவில் வாலாஜாபாத் பிரதேசத்தில் பெண்ணொருவர் இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

வாலாஜாபாத் பகுதியைத் சேர்ந்த 65 வயது பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் தனியாக வீட்டில் இருக்கும் போது இரும்பு ராடால் அடித்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 6 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நகையைத் திருடி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த பெண்ணின் வீட்டில் பத்துக்கு மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் வாடகைக்கு வசித்து வந்த நிலையில், அவர்களில் 2 பேர் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்