
வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை நீங்க
வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை நீங்க
வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை நீங்க
🟤வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையை போக்குவதற்காக சில எளிமையான குறிப்புகள் பற்றி பார்க்க இருக்கின்றோம். உங்களின் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக இருந்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் வரும். எனவே உங்கள் வீட்டில் உள்ள கரப்பான் பூச்சிகளை நிரந்தரமாக போக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்பதை இப் பதிவில் பார்ப்போம்.
🔸கரப்பான் பூச்சி போரிக் அமிலத்தைக் குடித்தால் அது இறந்துவிடும். சமையலறை தொட்டியின் அருகே போரிக் பவுடரை தூவுவதன் மூலமும் கரப்பான் பூச்சிகள் ஒழியும்.
🔸கரப்பான் பூச்சிகளுக்கு ஆபத்தானது புதினா தண்ணீர். இதனைப் பயன்படுத்தினால், வீட்டைச் சுற்றி கரப்பான் பூச்சிகள் வராது. உப்பு நீர் மற்றும் புதினா கலவையை ஒரு ஸ்ப்ரேயாக தயார் செய்து, கரப்பான் பூச்சிகள் அடிக்கடி காணப்படும் இடங்களில் தெளிக்கவும்
🔸கரப்பான் பூச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான மிகவும் சக்திவாய்ந்த அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்று மிளகுக்கீரை எண்ணெய். உங்கள் வீட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடல் நீர் மற்றும் மிளகுக்கீரை எண்ணெய் கலந்து தெளிக்கவும்.
🔸மிளகு தூள், வெங்காய விழுது, பூண்டு ஆகியவற்றை கரைசலாக தயார் செய்து, பின்னர் அதை ஒரு லீட்டர் தண்ணீரில் கரைத்து, கரப்பான் பூச்சி இருக்கும் இடங்களில் தெளித்தால் கரப்பான் பூச்சி ஓடிவிடும்.
🔸முட்டை மஞ்சள் கரு, போரிக் அமிலம், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி பின், அவைகளை கரப்பான் பூச்சி வரும் அறைகளில் வைத்தால் கரப்பான் பூச்சிகள் இறந்திருப்பதைக் காணலாம்.
🔸எலுமிச்சைச் சாறு, டெட்டால், தேவையான அளவு தண்ணீர் மற்றும் சூடம் ஆகியவற்றை கரைசலாக்கி பின்னர் அதனை ஒரு ஸ்ப்ரே போத்தலில் ஊற்றி உங்கள் வீட்டில் எங்கெல்லாம் கரப்பான் பூச்சி அதிகமாக வருகிறதோ அங்கெல்லாம் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இதனை வாரத்தில் இருமுறை செய்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது.
வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை நீங்க
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்