
வீட்டிற்குள் பல்லி வந்தால்? ஜோதிடம் கூறுவது இதுதான்
ஜோதிடத்தில் பல்லி பற்றி பல விடயங்கள் கூறப்பட்டுள்ளது. பல்லியைப் பார்ப்பது சுபம் என்றும் சிலர் அசுபம் என்றும் கூறுகின்றனர்.
பல்லிகளைக் கண்டாலே பெரும்பாலானோர் பயப்படுவார்கள். அவற்றை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கின்றனர்.
ஆனால், ஜோதிட நம்பிகையின்படி, பல்லி பண விஷயங்களில் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதாவது, பல்லி லட்சுமி தேவியுடன் தொடர்புடையது.
சில இடங்களில் புதிய வீட்டின் வாஸ்து பூஜையில் வெள்ளி பல்லி சிலைகளை பயன்படுத்தி பூஜை செய்வது உண்டு. ஏனென்றால், பல்லி வீட்டின் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அதிகரிக்கும் என நம்ப்படுகிறது.
அது மட்டுமன்றி தமிழகத்தில் பல்லிக்கு என கோயில் உள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் வீட்டு பூஜை அறை மற்றும் வரவேற்பு அறையில் பல்லிகள் தென்பட்டால் மிகவும் மங்களகரமானது. எதிர்க்காலத்தில் அதிக பணவரவை பெறப்போகிறீர்கள் என்பதை குறிக்கிறது.
தீபாவளி அன்று வீட்டில் பல்லியை இருந்தால், ஆண்டு முழுவதும் லட்சுமி தேவி அருள் உங்களுக்கு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், இதனால் மகத்தான மகிழ்ச்சியையும் செல்வத்தையும் பெறுவீர்கள்.
வீட்டில் ஒரே இடத்தில் 3 பல்லிகளை பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டம். இதனால், உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
நீங்கள் ஒரு புதிய வீட்டிற்குள் நுழையும் அதே நேரத்தில் உங்கள் கண்ணுக்கு பல்லி தென்பட்டால், அது மிகவும் மங்களகரமானதாக நம்பப்படுகிறது.
மேலும், பல்லியை பார்ப்பதால் முன்னோர்களின் ஆசீர்வாதம் மற்றும் அருள் நமக்கு கிடைக்கும் என்கிறது ஐதீகம் அத்தத்துடன், அன்னை லட்சுமி தேவியும் உங்களை ஆசீர்வதிக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.
கோயில்களில் உள்ள விருச்ச மரங்களில் பல்லியை பார்ப்பது தேவர்களை பார்ப்பதற்கு சமம் என்கிறது ஜோதிட ஐதீகம்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
