
வீட்டிற்குள் நுளைந்த பேருந்து: 13 பேர் வைத்தியசாலையில்
வவுனியா மதவாச்சி பகுதியில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்து மதவாச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனியார் பேருந்தின் சாரதி திடீரென சுகயீனமடைந்ததால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் மதவாச்சியிலுள்ள வீடொன்றுடன் கூடிய கராஜ் மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 6 பேர் சிறு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் படுகாயமடைந்த 7 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த தனியார் பேருந்து வவுனியாவில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையத்திற்கு ஊழியர்களை ஏற்றிச் சென்றதாகவும், விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸில் சுமார் 40 பணியாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
