வீட்டிற்குள் நுளைந்த எலி: ஒருவர் மரணம்

 

கொழும்பில் சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைய சகோதரர் இன்று திங்கட்கிழமை மயங்கி விழுந்து உயிர் இழந்துள்ளார்.

பத்தரமுல்லை தலங்கம தெற்கில் வசிக்கும் எகொடவத்தை ஆராச்சியை சேர்ந்த அனுர கித்சிறி என்ற (வயது – 59) ஓய்வுபெற்ற கணக்காளரே இதன் போது மரணித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இளைய சகோதரனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திருமணமாகாத மூத்த சகோதரன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந் நிலையில் எலி வீட்டிற்குள் நுளைந்தமை தொடர்பில் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைய சகோதரன் மயங்கி விழுந்து சிகிச்சைக்காக தலங்கம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.