வீட்டின் முன்னால் தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்த பெண் : மட்டக்களப்பில் சம்பவம்!
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு-கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
3 பிள்ளைகளின் தாயான குறித்த பெண் , நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், மன உளைச்சலுக்கு ஆளாகி இன்று வீட்டின் முற்றத்தில் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வற்கான நீதிமன்ற அனுமதியை பெற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
