
வீட்டின் மீது வீழ்ந்த அதிசய பொருளால் மக்கள் அதிர்ச்சி
பதுளை – ஹாலி-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகல பகுதியில் வீட்டின் கூரை மீது பனிக்கட்டி வீழ்ந்துள்ளது.
5 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய பனிக் கட்டியே இவ்வாறு வீட்டின் மீது வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நேற்றைய தினம் குறித்த பகுதியில் மழையுடனான வானிலை எதுவும் நிலவவில்லை என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
