
வீட்டின் கூரையை தூக்கி வீசிய பலத்த காற்று
-கிண்ணியா நிருபர்-
மினி சூறாவெளியால் நேற்று வெள்ளிக்கிழமை காலை தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியின் சிராஜ் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கெமுனுபுர த்தில் உள்ள வீடொன்றில் கூரை உள்ளிட்ட தகர சீட் முற்று முழுதாக சேதமாக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றுடன் கூடிய கால நிலையால் குறித்த வீட்டின் மீது மேல் பொருத்தப்பட்ட தகரங்கள் இவ்வாறு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விடயங்களை உரிய அபிவிருத்தி உத்தியோகத்தர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

