வீட்டின் கூரையில் மோதிய பேருந்து விபத்து
நுவரெலியா – ஹங்குரன்கெத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மலுல்ல பகுதியில் உள்ள ஹங்குரன்கெத்த – அதிகரிகம வீதியில் லிசகோஸ் அருகே ஒரு வீட்டின் கூரையின் மீது பேருந்து மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் ஹங்குரன்கெத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.