வீட்டினுள் பாம்பு வராம இருக்க

வீட்டினுள் பாம்பு வராம இருக்க

வீட்டினுள் பாம்பு வராம இருக்க

🟤வெயிலில் இருந்து விடுபட மக்கள் மழைக்காலத்தை மிகவும் விரும்புகிறார்கள். இருப்பினும்,  மழைக்காலமானது தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பாம்புகள் போன்ற சில மிக ஆபத்தான விலங்குகள் வீட்டிற்குள் நுழையும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

🟤குறிப்பாக கிராமங்கள், மலைப்பாங்கான பகுதிகள் மற்றும்  வீட்டின் தரை தளத்தில் வசிப்பவர்கள் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில்,  பாம்புகள் மற்றும் பூச்சிகளை வீட்டிலிற்குள் வராமல் தடுப்பதற்கான வழிகளை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

◼நீங்கள் தரைத்தளத்தில் வசிப்பவராக இருந்தால், உங்கள் வீடு மலைப்பாங்கான பகுதியிலோ, காடு அல்லது  பூங்கா போன்றவற்றுக்கு அருகில் இருந்தால், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மழை பெய்தால், கதவுகள் மற்றும் ஜன்னல்களை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும்.

◼வீட்டில் பாம்புகள் வராமல் இருக்க, ஜன்னல் மற்றும் கதவுகளில் வெங்காயம் மற்றும் பூண்டு விழுதை தடவலாம்.  பாம்புகள் இந்த வாசனைக்கு வீட்டினுள் வராது.

◼பாம்புகள் அல்லது பிற விஷ பூச்சிகள் உங்கள் வீட்டினுள் வராமல் இருக்க பிளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தலாம். வெளியிலும் தோட்டத்திலும் தேங்கி நிற்கும் தண்ணீரில் தெளிக்கலாம்.

◼வேப்ப எண்ணெயை தண்ணீரில் கலந்து, தினமும் வீடு முழுவதும் தெளித்து வந்தால், மூட்டைப்பூச்சிகள் நீங்கும். இந்த தண்ணீரை வீட்டின் தோட்டத்திலும் தெளிக்கலாம்.

◼இலவங்கப்பட்டை பொடி, வெள்ளை வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கலந்து வீட்டிற்கு வெளியே தெளிக்கலாம். இவை வீட்டினும் பாம்புகள் வராமல் தடுக்கும்.

◼பாம்புகள் சில தாவரங்களுக்கு பயப்படுகின்றன. கற்றாழை, பாம்பு செடி, துளசி மரம், எலுமிச்சை புல் போன்றவற்றை பருவமழையின் போது கண்டிப்பாக நட வேண்டும். வீட்டின் பிரதான நுழைவாயில் மற்றும் ஜன்னல்களுக்கு அருகில் இந்த செடிகளை நட வேண்டும். இந்த செடிகளின் வாசனையால், பாம்புகள் வீட்டின் அருகே வராது.

வீட்டினுள் பாம்பு வராம இருக்க

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்