வீடொன்று தீயினால் முற்றாக எரிந்து சேதம்

களுத்துறை மாவட்டத்தின் வாதுவ – பொதுப்பிட்டியவில் வீடொன்று தீயினால் முற்றாக எரிந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாதுவ, பொத்துப்பிட்டிய, கரடகஹா வீதியிலுள்ள வீடொன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தீ அருகில் இருந்த வீட்டிற்கும் பரவியதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குழு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்