வீடொன்றில் இளைஞனின் சடலம் மீட்பு
அவிசாவளையில் வீடொன்றில் இருந்து இளைஞனின் சடலம் நேற்று திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஹுலத்துவ, கெடஹெத்த பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்