வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் தம்பதி : விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சியான விடயங்கள்!

ஹம்பந்தோட்டை – ஹுங்கம பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரன்ன பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று அதிகாலை ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

குறித்த இருவரும் தம்பதியினர் என்றும், அவர்கள் இருவரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கி பின்னர் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையிலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த ஆண் ரன்ன பகுதியைச் சேர்ந்த 28 வயதான பசிந்து ஹெஷான் அல்லது போ பசிந்து, என்பவரும், உயிரிழந்த பெண் 26 வயதான திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், போதைப்பொருள் தொடர்பான தகராறு காரணமாக இந்த கொலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்தவர் 2024 மார்ச் மாதத்தில் கஹந்தமோதராவில் படகு ஓட்டுநர் ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.