
வீடொன்றிற்குள் புதையல் தோண்டியவர் கைது
வவுனியா – நெலுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிப்புரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புதையல் தோண்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அகழ்வுக்காகப் பயன்படுத்திய பொருட்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர் நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
