
வீடொன்றினுள் இரசாயனங்களை கலக்கும்போது கசிந்த நச்சுப் புகை: இருவர் உயிரிழப்பு
கொழும்பு மாலபே, பகுதியில் வீடொன்றினுள் விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
கஹந்தோட்டை வீதி, ஜயந்தி மாவத்தையில் அமைந்துள்ள வீட்டில் வசிக்கும் 65 மற்றும் 45 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இரசாயனங்கள் சிலவற்றை கலக்கச் சென்ற போது இருவரும் இந்த விஷ வாயுவை சுவாசித்ததால் மூச்சு திணறல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை வீட்டில் உள்ள இரசாயனப் பொருட்களை அடையாளம் காண முடியவில்லை எனவும், அந்த நச்சு வாயு இன்னும் வீட்டில் இருப்பதால் விசாரணையை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
