
வீடு முற்றாக தீக்கிரை: நிர்க்கதியான குடும்பம்
பலாங்கொட பிரதேசத்தில் நேற்று செவ்வாய் கிழமை வீடொன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பின்னவல பொலிஸர்தெரிவித்தனர்.
பின்னவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலேபொட பிரதேசத்தில் வீடொன்றிலேயே இத்தீ விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதனால் குறித்த வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.
தீ விபத்தில் வீடு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், பாடசாலை கற்றல் உபகரணங்கள் பாடசாலை சீருடைகள் என்பன முற்றாக தீயில் எரிந்துள்ளன.
இதனால் குறித்த குடும்பம் நிர்க்கதியடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பின்னவல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
