வீடு உடைத்து திருட்டு: 2 பேருக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்-

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் வீடுடைத்து தளபாடப் பொருட்கள் பலவற்றை திருடிய சந்தேகநபர்கள் இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

வீடு உடைத்து திருடப்பட்டுள்ளதாக கடந்த 16ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, இரண்டு சந்தேகநபர்களையும் 14 நாட்டகளுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24