வீடு உடைத்து திருட்டு: பொலிஸ் சாஜன் கைது

-பதுளை நிருபர்-

பதுளை – மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராகலை பகுதியில் வீடொன்றை உடைத்து 40 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை களவாடியமை தொடர்பில் பொலிஸ் சாஜன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மெதகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கடுபொத்த,கவுடெல்ல,பிபிலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் சாஜன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

2020 ஆம் ஆண்டு மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடூல்சீமை ராகலை பகுதியில் வீடொன்றில் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை களவாடியமை தொடர்பில் பதுளை தலைமையக குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

பின்னர் சந்தேக நபரான பொலிஸ் சாஜனை நேற்று மாலை கைது செய்ததாகவும் பின்னர் குறித்த சந்தேக நபரை இன்றைய தினம் பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது சந்தேக நபரை எதிர்வரும்
28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.