வீடுகளுக்கான சொத்து வரியை பிரான்ஸ் அதிகரித்தது
பிரான்ஸ் அரசாங்கம், 2026 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான வீடுகளுக்கு சொத்து வரியை மீண்டும் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.
நிதி அமைச்சு, நகராட்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டின் புதிய கணக்கீட்டு முறையை அறிமுகப்படுத்துவதால், இந்த அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது .
ஒவ்வொருவரும் சராசரியாக 63 யூரோவை மேலதிக சொத்து வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
புதிய மதிப்பீட்டு முறையின் அடிப்படையில், வீடுகளின் வசதிகள், இடம் மற்றும் சுற்றுப்புற சூழல் ஆகியவை கணக்கில் எடுக்கப்படும். இதனால், பல நகரங்களில் சொத்து வரி கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு பிரான்ஸில் வீடு கொள்வனவு செய்ய விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிடப்படுகிறது .
