வீடுகளில் கைகுழந்தையுடன் சென்று யாசகம் செய்வது போல் நடித்து திருடும் பெண்கள்

இந்தியாவில் ஈரோடு மாவட்டம் தயிர்பள்ளம் கிராமப் பகுதியில் உள்ள வீடுகளில் கைக்குழந்தைகளுடன் யாசகம் கேட்பது போல் நடித்துஇ பொருள்களைத் திருடிச்சென்ற பெண்களை சிசிடிவி காட்சிகளைக்கொண்டு பொலிஸார் தேடிவருகின்றனர்.

அப்பகுதியில் பப்பாளி மதிப்பு கூட்டு தொழிற்சாலை நடத்தி வரும் கணேசன் நேற்றைய முன்தினம் வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற அவர் மதியம் வீடு திரும்பியபோது அங்கிருந்த கேபிள், வயர், இரும்பு உள்ளிட்ட தளவாடப் பொருட்களை காணவில்லை என பொலிஸாரிடம் புகார் அளித்தார்.

மேலும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் முதலில் இரண்டு பெண்கள் வீடுகளில் சாப்பாடு கேட்பது போல் நடித்து நோட்டமிட்ட பின் மற்றொரு பெண் வீட்டின் கதவைத் திறந்து நுழைந்து அங்கிருந்த பொருட்களைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்