வீடியோ கேமிற்கு அடிமையான யாழ்.பல்கலை. மாணவனின் தவறான முடிவு

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்று வரும் புஷ்பராஜ் எஷில்நாத் (வயது – 22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த இளைஞன் தனது கைத்தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடுவதற்கு அடிமையாகியுள்ளமை முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க