வீடியோ காட்டி பாலியல் வன்கொடுமை செய்த ‘போலி’ பொலிஸ்
இளம்பெண் ஒருவர் தன் காதலனுடன் நெருக்கமாக இருந்த தருணத்தை வீடியோ எடுத்து அதனை காட்டிமிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இந்தியா – டெல்லியில் உள்ள பிரசாந்த் விகார் பகுதியில் 20 வயது கல்லூரி மாணவி வசிக்கிறார். இவரும் இவரது காதலனும் கடந்த வாரம் காரில் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது இவர்கள் காரில் நெருக்கமாக இருந்த தருணத்தை கவனித்த ஒரு நபர் ஆபாச வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இவர்கள் காரையே பின் தொடர்ந்து அந்த நபர் சென்றுள்ளார். காதலன் கல்லூரி மாணவியை வீட்டு வாசலில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். இளம்பெண் இறங்கி சென்றதை கவனித்த நபர் பெண்ணை பின் தொடர்ந்து சென்று வழிமறித்துள்ளார்.
இளம்பெண்ணிடம் தான் ஒரு போலீஸ் என்றும் காதலனுடன் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்துள்ளேன் என செல்போனை காண்பித்துள்ளார். தனது ஆசைக்கு இணங்காவிட்டால் இதை இணையத்தில் பதிவிடுவேன் என மிரட்டியுள்ளார். தொடர்ந்து மாணவியை பலந்தமாக தாக்கி படிகட்டு பகுதியில் வைத்து பலாத்கராம் செய்துள்ளார்.
பாதிப்புக்கு ஆளான அந்த பெண் தனது காதலனிடம் தனக்கு நேர்ந்த அவலத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக அருகே உள்ள பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. பெண் கொடுத்த அடையாளம் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரவி சோலங்கி என்ற அந்த குற்றவாளியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்