
வீடமைப்புத் திட்டங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீடமைப்புத் திட்டங்களையும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்து, தாமதமின்றி மக்களிடம் கையளிப்பதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NHDA) அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
வீடமைப்புத் திட்டங்களின் வினைத்திறன் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்துத் திட்டங்களையும் ஒரே ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் கீழ் கண்காணிப்பதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
2026 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “சொந்தமான இடம் – அழகான வாழ்க்கை” (A Place to Belong – A Beautiful Life) எனும் தேசிய வீடமைப்புத் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
