வீசிய கடும் காற்று: பிடுங்கி வீசப்பட்ட வீடு

-யாழ் நிருபர்-

யாழில் நேற்று முன்தினம் புதன் கிழமை இரவு வீசிய கடும் காற்று காரணமாக வீட்டொன்றின் கூரை தூக்கி எறியப்பட்டதையடுத்து, மூன்று குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.

சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம், கல் விளான் பகுதியில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் குறித்த வீட்டில் வசித்துவந்துள்ளனர்.

இந்த அனர்த்தம் காரணமாக, குறித்த வீட்டில் வசித்த 9 பேரும் சுழிபுரம் திருவடிநிலை சைவத் தமிழ்க் கலவன் பாடசாலையில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்