
விவசாய பிரிவு மாணவர்களால் உற்பத்திசெய்யப்பட்ட மரக்கன்றுகள் விற்பனைக்கு உண்டு
மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரி விவசாய பிரிவு (Plant & Nursery Development Assistant) NVQ 4 மாணவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட நல்லின மிளகாய்,கத்தரி, தக்காளி,கறிமிளகாய் கன்றுகள் விற்பனைக்கு உள்ளதாக கல்லூரியின் அதிபர் எம். சோமசூரியம் தெரிவிக்கின்றார்.
இங்கு பொதிகளிலும், பொதி செய்யாமலும் கன்றுகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் கொள்வனவு செய்யலாம்.
பொதி செய்யப்பட்ட தக்காளி 2 கன்றுகள் 30 ரூபா, கத்தரி 2 கன்றுகள் 30ரூபா, கறிமிளகாய் 2 கன்றுகள் 40ரூபா, மிளகாய் 2 கன்றுகள் 30ரூபாவிற்கு பெற்றுகொள்ளலாம்.
பொதி செய்யப்படாத கத்தரி, மிளகாய், தக்காளி ஒன்று 10 ரூபாவிற்கும், கறி மிளகாய் ஒன்று 15 ரூபாவிற்கும் இங்கு பெற்றுகொள்ளாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

