விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து விட்டு, தமது நெற் பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றக் கோரி, தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு கிராம விவசாயிகள் இன்று வியாழக்கிழமை வயலில் இறங்கிப் போராட்டம் செய்துள்ளனர்.

தொண்டமனாறு தடுப்பணையை மூடி வைத்திருப்பதால், தென்மராட்சி வரணிப் பிரதேச வயல்களில் தேங்கி நிற்கும் மேலதிக நீர் வடிந்து செல்ல முடியாமல், வயல் நிலங்களில் தேங்கி, பயிரை அழிவடையச் செய்வதால், விரக்தியடைந்த விவசாயிகள் மேற்படி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்