விவசாயிகள் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை
வற் வரி அதிகரிப்பை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் கடும் முடிவுகளை எடுக்க நேரிடும் என விவசாயிகள் தேசிய உச்சி மாநாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஹியங்கனை சொரபொர ஏரி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பேச்சாளர் ஜயந்த ரந்தெனிய இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.