விவசாயிகளுக்கு விவசாய அமைச்சு அறிவித்துள்ள தகவல்

இந்த வருடம் 100,000 மெற்றிக் தொன் நெல் அறுவடையை கொள்வனவு செய்ய நெல் சந்தைப்படுத்தல் சபை திட்டமிட்டுள்ளது.

அதற்காக, 10,500 மில்லியன் ரூபாவை செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஹெக்டேருக்கு நெல் பயிரிட விவசாயிகளுக்கு எவ்வளவு செலவாகும் என்பதை கண்டறிந்து, ஒரு கிலோ நெல்லின் விலையை தீர்மானிக்குமாறு  விவசாய சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.