விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டம்
திருகோணமலை மாவட்டத்தில் 2025/26 ஆண்டிற்கான பொருளாதார தொகைமதிப்பு விவசாயம் சார் நடவடிக்கை தொடர்பான தெளிவூட்டும் வேலைத்திட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தலைமையில் இடம்பெற்றது.
புள்ளிவிபரவியலாளர் இசட்.ஷரிபுதீன் ஏற்பாட்டில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இன்று (03) இடம் பெற்றது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையில் தொகைமதிப்பு ஆணையாளர், பிரதி மற்றும் உதவி தொகைமதிப்பு ஆணையாளர்களை தெளிவூட்டும் வேலைத்திட்டமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.