விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது பாய்ந்து குதறிய தெரு நாய்கள்:12 வயது சிறுவன் பலி

இந்தியாவில்  சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியதில் சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளான்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பரேலியில் உள்ள சிபி கஞ்ச் பகுதியில் கானா கவுந்தியா என்ற கிராமத்தில் (வயது – 12) அயான் என்கிற சிறுவனே நேற்று செவ்வாய்க்கிழமை இவ்வாறு தெரு நாய்களின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் தனது நண்பர்களுடன் வழக்கம் போல தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது திடீரென அங்கிருந்த தெருநாய்கள் சிறுவர்களை துரத்தி தாக்கத் தொடங்கியது.

அதைப் பார்த்து சிறுவர்கள் பயந்து ஓடத் தொடங்கினர். ஓடும் போது சிறுவன் அயான் தரையில் தவறி விழவே அவன் மீது நாய்கள் பாய்ந்து கடித்து குதறியது. இந்த கொடூர தாக்குதலில் சிறுவன் படுகாயம் அடைந்தான். சிறிது நேரத்தில் அப்பகுதியால் சென்றவர்கள் நாய்களை விரட்டி சிறுவனை நாய்களிடம் இருந்து மீட்டனர்.

படுகாயம் அடைந்த சிறுவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நாய்கள் தாக்குதலில் மற்றொரு 5 வயது குழந்தையும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்